பொழுதுபோக்கு
60 கி.மீ ஸ்பீடு, கதவை மூட ரிஸ்க் எடுத்த கார்த்தி; கைதி சம்பவம் பற்றி அன்பறிவு ஓபன் டாக்!
60 கி.மீ ஸ்பீடு, கதவை மூட ரிஸ்க் எடுத்த கார்த்தி; கைதி சம்பவம் பற்றி அன்பறிவு ஓபன் டாக்!
கைதி திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் குறித்தும், அதில் கார்த்தி எவ்வாறு முழு ஈடுபாட்டுடன் நடித்தார் என்றும் அப்படத்தில் பணியாற்றிய சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவு கூறியுள்ளனர். ஃபிலிம் ஃபிரிக்யூன்ஸி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் இந்த தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.தமிழ் சினிமாவின் இன்றைய மோஸ்ட் வான்டட் இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் கால் பதித்த லோகேஷ், கைதி திரைப்படத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்தார். இதன் தொடர்ச்சி, எல்.சி.யூ-வாக ஒரு புதிய சினிமாட்டிக் யூனிவர்ஸை உருவாக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. இதன் அடுத்த பாகங்களாக விக்ரம், லியோ போன்ற திரைப்படங்களும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றன.இதன் தொடர்ச்சியாக, கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கின்றனர். இவை அனைத்திற்கும் தொடக்கமாக அமைந்த கைதி திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளில், நடிகர் கார்த்தி எவ்வாறு ரிஸ்க் எடுத்து நடித்தார் என்று ஃபைட் மாஸ்டர்ஸ் அன்பறிவு குறிப்பிட்டுள்ளனர்.அதன்படி, “கைதி திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு மிகுந்த சவாலாக இருந்தது. குறிப்பாக, லாரியை கொண்டு சண்டைக் காட்சிகள் எடுப்பதற்கு சிரமமாக இருந்தது. ஆனால், நடிகர் கார்த்தி அனைத்து சண்டைக் காட்சிகளையும் சிறப்பாக செய்தார். கார் வைத்து ஈசியாக செய்துவிட முடியும். ஆனால், லாரியை வைத்து படமாக்குவதால் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் செய்யலாம் என்று திட்டமிட்டோம். ஆனால், படத்தில் லாரியை ஓட்ட தெரியுமா என்று கேட்டதும், நடிகர் கார்த்தி எப்படி சட்டென ஓட்டிக் காண்பித்தாரோ, அதையே தான் முதல் நாள் படப்பிடிப்பிலும் செய்தார்.கார்த்தி லாரி ஓட்டியதை பார்த்ததும், எங்களுக்கு இருந்த ஸ்ட்ரெஸ் பாதியாக குறைந்தது. அந்த அளவிற்கு சிறப்பாக லாரி ஓட்டினார். மேலும், அனைத்து காட்சிகளிலும் ரிஸ்க் எடுத்து கார்த்தி நடித்தார். சுமார் 60 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புற கதவை, கார்த்தி தான் இழுத்து மூடுவார். இது போன்று அனைத்து காட்சிகளிலும் அவரே ரிஸ்க் எடுத்து நடித்தார்” என அன்பறிவு மாஸ்டர்கள் தெரிவித்துள்ளனர்.