இலங்கை

இனிவரும் காலங்களில் வடமராட்சி கிழக்கில் மணல் அகழ மாட்டோம்! உறுதியளித்த பிரதேச செயலர்!

Published

on

இனிவரும் காலங்களில் வடமராட்சி கிழக்கில் மணல் அகழ மாட்டோம்! உறுதியளித்த பிரதேச செயலர்!

இனிமேல் வடமராட்சி கிழக்கு பகுதியில் மணல் மண் அகழமாட்டோம் என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.

 இன்று வடமராட்சி கிழக்கு பொது அமைப்புக்களுக்கும் வடமராட்சி கிழக்கு பொது அமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையில் இடம் பெற்ற சந்திப்பின்போது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் தெரிவித்துள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச பொது அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

 வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கும், வடமராட்சி கிழக்கு பொது அமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையில் இடம் பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக வடமராட்சி கிழக்கு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 

 வடமராட்சி கிழக்கு பிரதேசம் தொடர்ச்சியாக வளச்சுறண்டல்களுக்கு உள்ளாவதாகவும், அதனை தடுத்துநிறுத்துமாறும், நாளாந்தம் இடம் பெறும் 8 ரீப்பர் சுமை சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துமாறும், கோரிக்கை விடுத்தனர்

இச்சந்திப்பில் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் திரு. கனைச்செல்வன், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ.முரளிதரன், பிரதேச இளைஞர் சம்மேளன தலைவர் V.J.நிதர்சன், உட்பட பலரும் பொது அமைப்பு பிரதிநிதிகள் சார்பாகவும், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருடன் மருதங்கேணி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version