இலங்கை
எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!
எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!
கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விசேட ரயில் சேவைகள், ஒகஸ்ட் 4 முதல் ஒகஸ்ட் 8 வரை இயக்கப்படவுள்ளன.
இவை கொழும்பு கோட்டை, கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி, மற்றும் பொல்கஹவெல ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கண்டிக்குச் செல்லும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 8 விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.