பொழுதுபோக்கு
காக்க காக்க படத்தில் சூர்யா; சிபாரிசு செய்ததே இந்த நடிகை தான்: அவரே சொல்லிருக்கார் பாருங்க!
காக்க காக்க படத்தில் சூர்யா; சிபாரிசு செய்ததே இந்த நடிகை தான்: அவரே சொல்லிருக்கார் பாருங்க!
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள். இவர்கள் இணைந்து நடித்த ‘காக்க காக்க’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் திரைப்படத்தில் சூர்யாவை நாயகனாக நடிக்க வைப்பதற்கு ஜோதிகா தான் இயக்குனர் கௌதம் மேனனிடம் பரிந்துரைத்தார் என்று பிஹைண்ட்வுட்ஸுக்கு அளித்த ஒரு நேர்காணலில், ஜோதிகாவே இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.2003 ஆம் ஆண்டு வெளியான ‘காக்க காக்க’ திரைப்படம், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான ஒரு அதிரடி த்ரில்லர் திரைப்படமாகும். சூர்யா, ஜோதிகா, டேனியல் பாலாஜி மற்றும் ஜீவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ‘காக்க காக்க’ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளைக் கடந்த போதிலும், இன்னும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யா நடித்ததற்கான முக்கிய காரணம் ஜோதிகாதான் என்பது தெரியவந்துள்ளது.இதுகுறித்து ஜோதிகா கூறுகையில், சூர்யாவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவருடன் இணைந்து நடிக்க விரும்பியதாகவும் ஜோதிகா அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். ஜோதிகாவின் இந்தப் பரிந்துரை குறித்து கௌதம் மேனன் ஆரம்பத்தில் சற்று தயக்கம் காட்டியதாகவும், “சரி, இரு நண்பர்கள் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்” என்ற எண்ணத்தில் சூர்யாவை நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.ஆனால், இந்தத் திரைப்படம் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரின் திரை வாழ்க்கையிலும் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.’காக்க காக்க’ திரைப்படம் ஒரு அதிரடி திரில்லர் படமாக இருந்தாலும், சூர்யா – ஜோதிகா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த ஜோடி பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தாலும், ‘காக்க காக்க’ அவர்களின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. ஜோதிகாவின் பரிந்துரை இருவரின் காதல் கதையின் தொடக்கப்புள்ளியாகவும் அமைந்தது.real love story”❤️🩹😍 Suriya💎Jyotika