இந்தியா

கேரள செவிலியரின் மரண தண்டனை ரத்து: இந்திய கிராண்ட் முஃப்தி அலுவலகம் தகவல்

Published

on

கேரள செவிலியரின் மரண தண்டனை ரத்து: இந்திய கிராண்ட் முஃப்தி அலுவலகம் தகவல்

ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதித்த மரண தண்டனை “ரத்து செய்யப்பட்டு” “முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது” என்று இந்திய கிராண்ட் முஃப்தி காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முசல்யாரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கிராண்ட் முப்தி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏமன் அரசிடமிருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்ககேரளாவை சேர்ந்த 37 வயது இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் அதிகாரிகள் ஜூலை 16 அன்று மரண தண்டனையை நிறைவேற்ற திட்டமிட்டிருந்தனர்.ஆனால் இந்திய அரசின் தலையீட்டிற்கு பிறகு, குடும்பத்தினர் மற்ற தரப்பினருடன் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட மேலும் அவகாசம் கோரியதால், மரண தண்டனை ஒருநாள் முன்னதாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.வெளிவிவகார அமைச்சகம் ஜூலை 17 அன்று வெளியிட்ட அறிக்கையில், நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் சாத்தியமான அனைத்து உதவிகளை வழங்குவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ஏமனில் உள்ள சட்ட நடைமுறைகளுக்கு செவிலியர் பிரியாவின் குடும்பத்திற்கு உதவுவதற்காக அமைச்சகம் ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏன்?கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது செவிலியரான நிமிஷா பிரியா, 2008 ஆம் ஆண்டு யேமன் தலைநகர் சனாவுக்கு குடிப்பெயர்ந்தார். அதன்பின்னர், அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்து மஹதியுடன் இணைந்து சிறிய மருத்துவமனை ஒன்றை தொடங்கி, நடத்தி வந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால், நிமிஷாவின் நகைகள், மருத்துவமனையின் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவற்றைப் பறித்து, மஹதி அவரைக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.2017-ம் ஆண்டில் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போர்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தார். மஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீா்ப்பளிக்கப்பட்டு, நிமிஷாவுக்கு இந்த மாதம் 16 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version