இலங்கை

சஜீவனின் கொலை குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: இல்லையேல் முற்றுகை1 ரவிகரன் எச்சரிக்கை

Published

on

சஜீவனின் கொலை குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: இல்லையேல் முற்றுகை1 ரவிகரன் எச்சரிக்கை

முல்லைத்தீவு – மல்லாவிப் பகுதியைச்சேர்ந்த இளைஞன் ஆனந்தராசா சஜீவனின் கொலை விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக ஒருமாதகாலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .

 தவறினால் மல்லாவி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தொடர்போராட்டம் மேற்கொள்ளப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

 சஜீவனின் படுகொலைக்கு நீதிகோரி மல்லாவி பொதுஅமைப்புக்கள் மற்றும் மல்லாவி வர்த்தகசங்கத்தின் ஏற்பாட்டில் மல்லாவிப் பகுதியில் நேற்று (29)ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

 மல்லாவியைச் சேர்ந்த இளைஞன் கடந்த வருடம் படுகொலைசெய்யப்பட்டிருந்த நிலையில், நட்டாங்கண்டல் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளம் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில் இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிலருக்கெதிராக சஜீவனின் குடும்பத்தினரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டிருந்தது. 

இருப்பினும் உரியவர்களுக்கெதிராக பொலிஸாரால் இதுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தப் படுகொலைக்கான நீதி கிடைக்கவேண்டும். குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். இன்னும் ஒரு மாதகாலத்திற்குள் இந்த கொலைக்கான நீதி கிடைக்கவில்லை எனில், மல்லாவி பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டு பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும்.

Advertisement

அதேவேளை இந்தப் படுகொலை விவகாரத்தில் மல்லாவிப் பொலிஸாரின் அசமந்தப்போக்கு பற்றி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிற்கு தெரியப்படுத்துவதுடன், இந்த படுகொலைக்கான நீதியை உடனடியாக வழங்குமாறும் கோரவுள்ளேன் -என்றார். 

 ஆர்ப்பாட்டப் பகுதிக்குச் சென்ற மல்லாவி பொலிஸ் அதிகாரி ஒருவர் இதற்குப் பதிலளிக்கையில், தற்போது குறித்த படுகொலை விவகாரம் குற்றப் புலனாய்வுத்துறையினரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த படுகொலைக்கு விரைந்து உரிய நீதியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version