இலங்கை

ஜெயவர்தனபுர பொது மருத்துவமனை தவிசாளர் இராஜினாமா

Published

on

ஜெயவர்தனபுர பொது மருத்துவமனை தவிசாளர் இராஜினாமா

  கொழும்பு ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளரும், மகப்பேறு மருத்துவருமான ஆலோசகர் வைத்தியர் ஜயங்க திலகரத்ன தனது ராஜினாமா கடிதத்தை சுகாதார அமைச்சரிடம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது கடிதத்தை சுகாதார அமைச்சர் ஏற்றுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

அவர் ஒக்டோபர் 2024 இல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், இந்த நியமனம் அரசியல் நோக்கம் கொண்டது என்று மருத்துவத் துறையினர் விமர்சித்தனர்.

இந்நிலையில் பதுளை போதனா மருத்துவமனையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் திலகரத்ன கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version