உலகம்

நடுவானில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்

Published

on

நடுவானில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்

லண்டனில் இருந்து கிளாஸ்கோ செல்லும் விமானம் நடுவானில பறந்து கொண்டு இருந்த போது, 41 வயதான ஒரு பயணி, திடீரென சீட்டில் இருந்து எழுந்து விமானத்தின் நடுவே வந்து நின்றுகொண்டு, நான் இந்த விமானத்தை குண்டு வைத்து வெடிக்கச் செய்யப் போகிறேன், அமெரிக்காவுக்கு சாவு, டிரம்புக்கு சாவு என்று பயணிகள் அனைவரையும் அச்சுறுத்தும் விதத்தில் அறிவிப்பு செய்துவிட்டு தொடர்ந்து அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்ற உரத்த குரலில் முழக்கங்களை மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டு இருக்கும்போது, திடீரென விமான காவலர் ஒருவர் பாய்ந்து அந்த நபரை கீழே தள்ளி முட்டி மடக்கி ஏறி அமர்ந்து கொண்டு கைது செய்துவிட்டார். 

பின்னர் உடமைகளை பரிசோதித்தபோது, நாயக்கிடம் இந்திய குடியுரிமை சான்று பெற்றிருப்பதைக் குறிக்கும் ஆவணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

அந்த வெடிகுண்டுநபரின் பெயர் அபய் தேவதாஸ் நாயக் என்பதும், இந்தியர் என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது. விமானி நடுவானில் அவசரநிலையை அறிவித்து, விமானத்தை விரைவாக தரையிறக்கினார். 

நாயக் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் காணப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சந்தேக நபர் எந்த ஆயுதங்களையும் தம்மோடு எடுத்துச் செல்லவில்லை என்பதையும் உறுதி படுத்தினர்.

மொத்தத்தில் இந்த அச்ச்சுறுத்தல் போலி என்று முடிவு செய்தனர். நாயக் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு… அங்கு நாயக் மீது தாக்குதல் மற்றும் விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

Advertisement

நாயக்கின் நோக்கங்கள் என்ன, ஏன் முஸ்லிம் போல நடித்து “அல்லாஹு அக்பர்” என்று கத்த வேண்டும் என்பது குறித்து எல்லாம் விசாரணை அதிகாரிகள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. வழக்கு மறு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version