பொழுதுபோக்கு

நான் கண்ட்ரோல் பண்ணேன்; ஆனா சொல்லாம இருக்க முடியல… ரகுவரன் பாராட்டிய நடிகர் இவர் தான்!

Published

on

நான் கண்ட்ரோல் பண்ணேன்; ஆனா சொல்லாம இருக்க முடியல… ரகுவரன் பாராட்டிய நடிகர் இவர் தான்!

ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் திரைப்படம் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அர்ஜுன், ரகுவரன், மனிஷா கொய்ராலா, வடிவேலு எனப் பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்தப் படத்தில், அர்ஜுன் ரகுவரனைப் பேட்டி எடுக்கும் காட்சி மிகவும் முக்கியமானதாகவும், ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்ட ஒன்றாகவும் அமைந்தது.குறிப்பாக, இந்தப் படத்தில் பத்திரிகையாளராக வரும் அர்ஜுன், ஒரு நாள் முதல்வராக பதவியேற்பது, ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளைச் சந்தித்து கேள்வி கேட்கும் காட்சிகள் மிகவும் பிரபலமானவை. இந்த ஒரு காட்சியைப் படமாக்குவதற்காகப் படக்குழுவினர் நீண்ட நேரம் காத்திருந்து எடுத்ததாக அர்ஜுன் சமீபத்தில் ஜீ5 தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.அவர் குறிப்பிட்டதாவது, அந்தப் பேட்டி காட்சியைப் படமாக்கும்போது, ரகுவரன் சார் மிகச் சிறப்பாக நடித்தார். ஒவ்வொரு சிறிய ரியாக்ஷனையும் கூட மிகக் கவனமாக வெளிப்படுத்தி நடிக்க வேண்டியிருந்தது. படக்குழுவினரும் ஒவ்வொரு சிறு அசைவையும், முகபாவனையையும் துல்லியமாகப் படமாக்கினர். தேவையான ரியாக்ஷன்கள் அனைத்தும் கச்சிதமாகப் பதிவு செய்யப்பட்டன என்றார்.படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு, அன்றிரவு ரகுவரன் அர்ஜுனை தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது, “நான் மிகவும் கண்ட்ரோல் பன்னேன் ஆனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இன்று நீங்கள் அந்த சீனில் நடித்த விதம் மிக நன்றாக இருந்தது. சின்னச் சின்ன விஷயங்களைக் கூட மிகவும் கவனமாகப் பார்த்து, ரியாக்ஷன் கொடுத்து நடித்திருந்தீர்கள். அவை அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தன,” என்று ரகுவரன் பாராட்டியதாக அர்ஜுன் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.அவர் கூறியதுபோலவேபடத்தின் உச்சக்கட்ட காட்சிகளில் ஒன்று, அர்ஜுன் ஊழல் அரசியல்வாதியான ரகுவரனை (அருணாச்சலம்) நேர்காணல் செய்யும் காட்சி. இந்தக் காட்சி படத்தின் விறுவிறுப்புக்கு உயிர் கொடுத்தது. இந்த ஒரு காட்சியைப் படமாக்க படக்குழு நீண்ட நேரம் காத்திருந்தது. ரகுவரன் மற்றும் அர்ஜுன் இருவரின் சின்னச் சின்ன அசைவுகளும், ரியாக்‌ஷன்கள் மிக நுணுக்கமாகப் படமாக்கப்பட்டன. ஒவ்வொரு வசனத்திற்கும், ஒவ்வொரு கேள்விக்கும் ரகுவரன் மற்றும் அர்ஜுனின் எதிர்வினைகள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டன. படக்குழு தேவையான ரியாக்‌ஷன்களைப் பலமுறை படமாக்கி, மிகவும் திருப்தியாக சூட்டிங்கை முடித்தது.😍😍😍 Weekend With Stars #Throwback #WeekendWithStars #SuhasiniManiratnam #Arjun #PrakashRaj #Raghuvaran #Zeetamil #ZeeOnTheGo

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version