உலகம்

நான் தலையிடாவிட்டால் இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்துகொண்டிருக்கும் -மீண்டும் டிரம்ப்!

Published

on

நான் தலையிடாவிட்டால் இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்துகொண்டிருக்கும் -மீண்டும் டிரம்ப்!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் எழுந்தபோது சரியான நேரத்தில் தான் தலையிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

தான் தலையிடாவிட்டால், இரு நாடுகளும் இந்நேரம் போரில் ஈடுபட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் ஸ்கொட்லாந்தில் ஊடகங்களிடம் பேசிய டிரம்ப், சமீப காலங்களில் உலகம் முழுவதும் ஆறு போர்களைத் தடுத்ததாகவும்

“நான் இல்லையென்றால், ஆறு பெரிய போர்கள் நடந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும்  இந்தியா-பாகிஸ்தான் அவற்றில் மிகப்பெரியது. ஏனென்றால் இவை இரண்டும் அணு ஆயுதம் ஏந்திய நாடுகள்.

Advertisement

அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால், போர் அதிகரிப்பு மற்றும் அணு ஆயுத வீழ்ச்சி போன்ற பயங்கரமான சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைவர்களை நான் நன்கு அறிவேன். போருக்குச் செல்ல விரும்பினால் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட மாட்டேன் என்பதை நான் தெளிவுபடுத்தியுள்ளேன்” என்று தெரிவித்துள்ள நிலையில்

இந்தியா-பாகிஸ்தான் போரை தானே நிறுத்தியதாக டிரம்ப் ஏற்கனவே பலமுறை கருத்து தெரிவித்துள்ளதும் அதை மத்திய அரசு மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.[ஒ] 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version