இலங்கை

மன்னார் கடற்பகுதிகளில் கரையொதுங்கும் பிளாஸ்டிக் துவல்கள்!

Published

on

மன்னார் கடற்பகுதிகளில் கரையொதுங்கும் பிளாஸ்டிக் துவல்கள்!

கேரள கடற்பரப்பில் பிளாஸ்டிக் துவல்களை ஏற்றிச் சென்ற கப்பல் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி மூழ்கிய நிலையில் குறித்த கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் துவல்கள் தற்போது மன்னார் மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கி வருகிறது.

இந்த நிலையில் கரை ஒதுங்கி தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் துவல்களை அகற்றும் செயல்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நேற்றைய தினம் (28) மன்னார் சௌத்பார்,கீரி,தாழ்வுபாடு கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் துவல்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட மக்களை பயன்படுத்தி அவர்களுக்கு நாளாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

கடல் சூழலையும்,கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

கடல்சார் பாதுகாப்பு சூழல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆரம்ப நிகழ்வு மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இன்று திங்கட்கிழமை (28) காலை 11 மணிக்கு ஆரம்பமானது.

குறித்த ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,கடல்சார் பாதுகாப்பு சூழல் திணைக்கள பிரதி நிதிகள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version