இந்தியா

மோடியின் சமீபத்திய மாலைதீவு பயணம்!

Published

on

மோடியின் சமீபத்திய மாலைதீவு பயணம்!

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய மாலைதீவு பயணம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜூலை 26 அன்று, மாலைதீவின் 60வது சுதந்திர தின விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

மாலைதீவு அதிபர் முகமது முய்சு தனது தேர்தல் பிரசாரத்தின் போது ‘இந்தியா வெளியேறு’ (India Out) என்ற முழக்கத்தை முன்வைத்ததாலும், வெற்றி பெற்ற ஆரம்ப மாதங்களில் இந்தியா மீது கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததாலும் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisement

அச்சமயத்தில், சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்துவது பற்றி முய்சு தொடர்ந்து பேசி வந்தார். ஆனால், இப்போது அதே முய்சு மிகப்பெரும் தேசிய விழாவில் பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.

இக்காரணத்துக்காக, இந்தப் பயணம் சர்வதேச ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெற்றது. மேலும் இது இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. குறிப்பாக, சீனாவும் மாலைதீவில் தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சிக்கும் நேரத்தில் இந்த பயணம் அமைந்தது முக்கியமாக கருதப்படுகிறது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version