சினிமா
மோனிகா பாட்டு இருக்கட்டும்!! பூஜா ஹெக்டே போட்ட ஆடை இத்தனை லட்சம் ரூபாயா?
மோனிகா பாட்டு இருக்கட்டும்!! பூஜா ஹெக்டே போட்ட ஆடை இத்தனை லட்சம் ரூபாயா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகர்ஜுனா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, அமீர் கான் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள படம் கூலி. படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் டிரைலர் சான்ச் நிகழ்ச்சி ஆகஸ்ட் 2 ஆம் தேதி நெரு ஸ்டேடியத்தில் நடிக்கவுள்ளது.அனிருத் இசையில் இப்படத்தின் மோனிகா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. பூஜா ஹெக்டேவும் செளபின் சாஹிரும் பாடலுக்கு அப்படி ஆட்டம் போட்டிருப்பது அனைவரது கவனத்தை ஈர்த்தது. இப்பாடலுக்கு பலரும் நடனாடி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகிறார்கள்.மோனிகாவாக சிகப்புநிற ஆடையணிந்து பூஜா ஹெக்டே நடனமாடியிருப்பார். பூஜா ஹெக்டேவின் அந்த ஆடை Versace Medusa 95 Grapped Gown வகையை சேர்ந்ததாம். அதன் விலை கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.அந்த உடை தற்போது ஃபேமஸாகிய நிலையில் பலரும் அந்த ஆடையை வாங்க விருப்பப்பட்டாலும் விலையை கேட்டு பலரும் மிரண்டு போயிருக்கிறார்கள்.