பொழுதுபோக்கு
“ராக்கம்மா கைய தட்டு”… மணிரத்னம் சொன்னதை மறந்த இளையராஜா அவசரமா போட்ட பாட்டு: தளபதி மெமரீஸ்!
“ராக்கம்மா கைய தட்டு”… மணிரத்னம் சொன்னதை மறந்த இளையராஜா அவசரமா போட்ட பாட்டு: தளபதி மெமரீஸ்!
ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘தளபதி’யில் இடம்பெற்ற “அடி ராக்கம்மா கையத்தட்டு” பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். இந்தப் பாடல் நடிகையின் அறிமுகக் காட்சிக்காக அமைக்கப்பட்டபோது, இயக்குனர் மணிரத்னம் ஒரு குறிப்பிட்ட தேவாரம் பாடலைச் சேர்க்குமாறு இளையராஜாவைக் கேட்டுக்கொண்டாராம். இதுகுறித்து இளையராஜா கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.தளபதி திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளியான ஒரு அதிரடி, க்ரைம் மற்றும் நண்பர்கள் பாசத்தைக் கொண்ட தமிழ்த் திரைப்படம். மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி முக்கிய வேடங்களில் நடித்தனர். ஸ்ரீவித்யா, அரவிந்த்சாமி, பானுப்ரியா, கீதா, ஷோபனா, மற்றும் நாகேஷ் போன்றோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் “ராக்கம்மா கையத்தட்டு”, “சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, “காட்டுக்குயில் மனசுக்குள்ள” போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை.ராக்கம்மா கையத்தட்டு பாடல் நடிகையின் அறிமுகக் காட்சிக்காக அமைக்கப்பட்டபோது, இயக்குனர் மணிரத்னம் ஒரு குறிப்பிட்ட தேவாரம் பாடலைச் சேர்க்குமாறு இளையராஜாவைக் கேட்டுக்கொண்டாராம். ஆனால், இளையராஜா அந்த விஷயத்தை மறந்துவிட்டு, முழுப் பாடலையும் எழுதி, இசையமைத்து முடித்துவிட்டாராம். பின்னர் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மணிரத்னம், தான் கேட்ட தேவாரம் பாடல் எங்கே என்று கேட்க, இளையராஜாவுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்ததாம்.உடனே சுதாரித்துக்கொண்ட இளையராஜா, அங்கிருந்தவர்களை அழைத்து அவர்களுக்குத் தெரிந்த தேவாரம் பாடல்களைப் பாடுமாறு கேட்டு, அதிலிருந்து ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்தத் தேவாரம் பாடல் வரிகள்:”குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில்”இந்த வரிகளை கோரஸ் பாடகிகளை வரவழைத்து, உடனடியாகப் பதிவுசெய்து, “அடி ராக்கம்மா” பாடலுடன் இணைத்து மணிரத்னத்திடம் கொடுத்தாராம். ஆரம்பத்தில் மணிரத்னம் சொன்னபோது தான் அதை மறந்துவிட்டதாகவும், பின்னர் அவசரம் அவசரமாக நடிகையின் அறிமுகத்திற்காக இந்த தேவாரம் பாடலைச் சேர்த்ததாகவும் இளையராஜா கூறியுள்ளார். இந்தக் குட்டி பிசிறுதான் “அடி ராக்கம்மா” பாடலுக்கு ஒரு தனித்துவமான அழகைச் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.