பொழுதுபோக்கு
ஸ்டூடியோ பின்னாடி வழி இருக்கா? அனிருத்தை தேடி அலையும் முருகதாஸ், எஸ்.கே: மதராஸி ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!
ஸ்டூடியோ பின்னாடி வழி இருக்கா? அனிருத்தை தேடி அலையும் முருகதாஸ், எஸ்.கே: மதராஸி ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராஸி திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ள நிலையில், இதற்கான ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், காக்கிச்சட்டை, ஹீரோ, அமரன் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், இவரின் அடுத்தடுத்து படங்கள் குறித்தும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதனிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் மதராஸி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்து டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், ஏஆர்.முருகதாஸ் அனிருத் ஸ்டூடியோவில் அமர்ந்து கொசு பேட் வைத்து அடித்துக்கொண்டு இருக்கிறார். அங்கு வரும் சிவகார்த்திகேயன் எனக்கு முன்னாடியே வந்துவிட்டீங்களா, அனி எங்க என்று கேட்க, உள்ள வொர்க் பண்ணிட்டு இருக்கார் என்று ஏ.ஆர்.முருதாஸ் சொல்கிறார்.இதை கேட்ட சிவகார்த்திகேயன், வாங்க உள்ளே போகலம் என்று சொல்ல அப்படி போக கூடாது. அவர் பாட்டுடன் வருவார் என்று சொல்ல, அதையும் மீறி சிவகார்த்திகேயன் உள்ளே போக முயற்சிக்க, அவர் பாட்டு கொடுத்துவிடுவார். நான் அவருடன் 2 படம் வொர்க் பண்ணிருக்கேன் உள்ளே போக வேண்டாம் என்று சொல்ல, உள்ளே போகனும் சார் நாள் அவருடன் 7 படம் வொர்க் பண்ணிருக்கேன் என்ற சிவகார்த்திகேயன் சொல்ல, இவரும் உள்ளே சென்று பார்க்கின்றனர். அங்கு அனிருத் இல்லை.ஸ்டூடியோ பின்னாடி வழி எதாவது இருக்கா, அது வழியாக வெளியில போய்ட்டாரா என்று அனிருத்தை தேடிக்கொண்டிருக்க, ஒரு டேபிளுக்கு அடியில் அமர்ந்து அனிருத் ஏதோ வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார். முருகதாஸ், சிவகார்த்திகேயன் இருவரையும் பார்த்த அனிருத், உள்ள வந்துட்டீங்களா என்று கேட்க, என்ன மாதிரி பாட்டு என்று பேசிக்கொள்கிறனர். முருகதாஸ் இது லவ் ஃபெயிலியர் பாட்டு என்று சொல்லிவிட்டு யாரை எழுத வைக்கலாம் என்று அனிருத்திடம் சொல்கிறார். இதை பார்த்த சிவகார்த்திகேயன் நம்மலதா எழுத சொல்வாங்கனு யோசிக்கிறார்.இப்போது பாடலை சூப்பர் சுப்பு எழுதட்டும் என்று அனிருத் சொல்ல சூப்பர் சுப்பு உள்ளே வருகிறார். அவரிடம் லவ் ஃபெயிலியர் பாட்டு, ஹீரோ சோகமாக இருக்கிறார். இவரை சுற்றி எல்லாம் சந்தோஷமாக இருக்காங்க என்று சொல்ல அவர் சலம்பலா என்ற பாடலை சொல்கிறார். இந்த பாடல் ஜூலை 31-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் 4 பேரும் லுங்கி கட்டிக்கொண்டு இருக்கின்றனர்.