சினிமா
அமலாக்கல் துறையில் ஆஜராகிய பிரகாஷ் ராஜ்.! சூடுபிடிக்கும் ஆன்லைன் ரம்மி விவகாரம்…
அமலாக்கல் துறையில் ஆஜராகிய பிரகாஷ் ராஜ்.! சூடுபிடிக்கும் ஆன்லைன் ரம்மி விவகாரம்…
தென்னிந்திய திரைப்பட உலகின் முக்கிய நடிகரான பிரகாஷ் ராஜ், ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை (Enforcement Directorate) முன்வைத்த விசாரணையில், இன்று ஐதராபாத் நகரத்தில் உள்ள அலுவலகத்தில் தனது வழக்கறிஞருடன் ஆஜராகியுள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக, ஆன்லைன் ரம்மி மற்றும் சூதாட்ட செயலிகள் பெரிதும் வளர்ச்சியடைந்து வருகின்றன. இதன் விளம்பரங்களில் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் பங்கு பெறுவதும், அவை சமூகத்தில் தவறான விளைவுகளை ஏற்படுத்துவதும் பரவலாக விமர்சிக்கப்படும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.இந்த சூழ்நிலையில் தான், பிரபல நடிகர்கள் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்ததன் மூலம், அவை சட்ட விரோதமான சூதாட்ட செயலிகளை ஊக்குவித்ததாக கருதி, ஐதராபாத் பொலீஸ் நிலையத்தில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.ஐதராபாத் நகர காவல் துறையினர் புதிதாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அமலாக்கத் துறை தற்போது வழக்குப் பதிவு செய்து, 25க்கும் மேற்பட்ட நடிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.இதனாலேயே பிரகாஷ் ராஜ் இன்று (ஜூலை 30, 2025) காலை அமலாக்கத் துறை அலுவலகத்தில் தனது வழக்கறிஞருடன் ஆஜராகியுள்ளார். தற்பொழுது அங்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.