இலங்கை

ஆனைச்சேனையில் மீனவர் சடலமாக மீட்பு!

Published

on

ஆனைச்சேனையில் மீனவர் சடலமாக மீட்பு!

மூதூர் – ஆனைச்சேனை களப்புப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் நீரில் மிதந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   

மூதூர் -பாலநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சேகு முகம்மது றம்சூன் (வயது -45)

Advertisement

என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை ஆனைச்சேனைக் களப்புக் கடலுக்கு மீன்பிடிப்பதற்காகச் சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

களப்புக் கடல் பகுதிக்கு மீன்பிடிப்பதற்காகச் சென்ற மற்றுமொரு மீனவரொருவர் நீரில் மிதந்த நிலையில் சடலமொன்று காணப்படுவதை அவதானித்தார்.  

Advertisement

அதனையடுத்து சடலம் உள்ளதாக அவர் மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டனர்.  

குறித்த மீனவரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version