இலங்கை

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில்வெளியான தகவல்!

Published

on

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில்வெளியான தகவல்!

இலத்திரனியல் கடவுச்சீட்டு குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான விலை மனுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு அந்த திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement

இந்த விலைமனுக்கோரலுக்கான அழைப்பு 7 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்கள் தாமதமின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 தினமும் சுமார் 3,150 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்கள் காலை 6:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version