இலங்கை
கட்டுடையில் வாள்வெட்டு; ஒருவருக்குப் படுகாயம்!
கட்டுடையில் வாள்வெட்டு; ஒருவருக்குப் படுகாயம்!
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட கட்டுடையப் பகுதிபெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்களில் பயணித்த நபரைப்பின் தொடர்ந்து ஓட்டோவில் வந்த மூவர், அவரைத் தள்ளி விழுத்திவிட்டு வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ள னர். சந்தேகநபர்கள் தப்பிச்சென்ற நிலையில், பாதிக்கப்பட்ட நபர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.