இலங்கை
காட்டு யானை தாக்கி சிவில் அதிகாரி உயிரிழப்பு
காட்டு யானை தாக்கி சிவில் அதிகாரி உயிரிழப்பு
மின்சார வேலியை மேற்பார்வையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இன்று (30) மாலை யானை தாக்கியதில் இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது தெற்கு சியம்பலாங்கமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் சிவில் பாதுகாப்புத் துறையின் கெக்கிராவ துணைப் பிராந்தியத்தில் இணைக்கப்பட்ட ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரிஆவார்.
மீகலேவ வனவிலங்கு சரணாலயத்திற்குச் சொந்தமான ஹபராவத்தை மின்சார வேலியை மேற்பார்வையிடும் பொறுப்பில் இந்த சிவில் பாதுகாப்பு அதிகாரி இருந்ததாகக் கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக கல்னேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.