இலங்கை

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு!

Published

on

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு!

கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா நேற்று (29.07.2025) திறந்து வைக்கபட்டுள்ளது.

மாவட்ட செயலகத்திற்கு பெற்றோர்களோடு வருகைதரும் சிறுவர், சிறுமிகளின் நன்மை கருதி குறித்த சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ் – கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், World Vision நிறுவனத்தின் கரைச்சி, கண்டாவளை பிரதேச திட்ட முகாமையாளர் மக்டலின் குயிண்டஸ் ஆகியோர் கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தனர்.

கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் World Vision நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்த சிறுவர் பூங்கா நிர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவ் அழகிய பூங்கா சிறுவர்களை மகிழ்வூட்டவும் சிந்திக்கவும், அவர்களது உடல், மன அசதியைப் போக்க ஊஞ்சல், சறுக்கல்கள், இராட்டினம், சாய்பலகை, சிறு விளையாட்டு இல்லம் போன்றன பெரிதும் மகிழ்ச்சியூட்டுகின்றன.

மேலும், மாவட்ட செயலக சிறுவர் பெண்கள் பிரிவிற்கு வருகை தருபவர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தும் இடமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version