இலங்கை

சரணடைந்த ரோஹிதவின் மகள்!

Published

on

சரணடைந்த ரோஹிதவின் மகள்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் மெலனி அபேகுணவர்தன, வலான மோசடி தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

அவர் இன்று (30) காலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார். 

Advertisement

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் சொகுசு வாகனம் தொடர்பான வழக்கில் அவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார்.

இந்த வழக்கில் முன்னதாக அவரது கணவரும் அண்மையில் மத்துகம நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.

இந்த வழக்கில் குறித்த இருவருக்கும் மத்துகம நீதிவான் நீதிமன்றினால் வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version