சினிமா

சின்ன வயசுல நான் பண்ண அந்த தப்புதான்..இப்போ புரிது!! சீரியல் நடிகை தேவிப்பிரியா ஆதங்கம்..

Published

on

சின்ன வயசுல நான் பண்ண அந்த தப்புதான்..இப்போ புரிது!! சீரியல் நடிகை தேவிப்பிரியா ஆதங்கம்..

சின்னத்திரை நடிகையாகவும் பல படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை தேவிப்பிரியா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தன் திரை வாழ்க்கை குறித்த ஆதங்கத்தை மனம் திறந்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்.அதில், நான் சின்ன வயதிலேயே சின்னத்திரை சீரியல்களில் நடிக்கத்துவங்கிவிட்டேன். இதனால் எனக்கு சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. என்னுடன் சீரியலில் நடித்துக்கொண்டிருந்த நடிகை தேவதர்ஷினி எல்லாம் கதை தேர்வு செய்து நடித்தார்கள்.அதனால் தான் அவர்கள் இப்போதும் சினிமாவில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள். நான் அந்நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்துவிட்டேன். அதனால் எனக்கு சரியான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது.இப்போதும் நான் சீரியலில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தாலும் எனக்கு கதாநாயகியாக நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. நான் சின்ன வயதில் வந்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்தது தவறு என்று இப்போதுதான் புரிந்தது என்று வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார் நடிகை தேவிப்பிரியா.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version