இலங்கை

நல்லூர் ஆலயத்திற்கு இனிமேல் மணல் விநியோகிக்க முடியாது!

Published

on

நல்லூர் ஆலயத்திற்கு இனிமேல் மணல் விநியோகிக்க முடியாது!

  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் கடந்த காலங்களில் முறையற்ற மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டமையால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் உதயகுமார் யுகதீஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு கூட இனிமேல் மணல் மண் விநியோகிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

நேற்று (29) பிற்பகல் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே பருத்தித்துறை பிரதேச செயலாளர் உதயகுமார் யுகதீஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் ,

தாம் நல்லூர் ஆலயத்திற்கு மணல் மண் வழங்குவதற்கு எதிரானவர் அல்ல என்றும், கொட்டோடை கிராமம் கடந்தகால முறையற்ற மணல் அகழ்வினால் ஏற்படுத்தப்பட்ட பாரிய சூழல் பாதிப்பு காரணமாகவே மக்கள் நல்லூரான் ஆலயத்திற்கு மணல் மண் வழங்க மறுத்ததாகவும் தெரிவித்தார்.

இதன்போது அம்பன் கொட்டோடை வீதி பயன்படுத்துவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது தொடர்பாக கேட்டபோது, தமது சபைக்கு சொந்தமான வீதியால் மணல் மண் ஏற்றிச்சென்றால் சேதமடையும் வீதிக்கான இழப்பீட்டை பெறுவதற்காகவே தான் அனுமதி கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

இதேவேளை மணல் கொள்ளை இடம்பெறும் அம்பன் கொட்டோடை வீதியானது கனரக வாகனங்கள் செல்வதற்கு பிரதேச சபையால் தடைசெய்யப்பட்ட வீதி ஆகும்.

அதேவேளை வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக வருடந்தோறும் குறிப்பிட்ட மணல் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version