உலகம்

நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவை தாக்கிய சுனாமி!

Published

on

நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவை தாக்கிய சுனாமி!

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கம்சட்கா தீபகற்பத்தை 13 அடி உயர சுனாமி அலை அடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று (30) காலை 8.8 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Advertisement

ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கியிலிருந்து சுமார் 85 மைல் தொலைவில் 19 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது. 

 நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

மேலும் 1 மீட்டர் வரை அலைகள் ஏற்படக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. 

Advertisement

 கூடுதலாக, ஹவாய் தீவுகள் மற்றும் அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version