இந்தியா

புதுச்சேரியில் புதிய ரேசன் கார்டு பெற ஜி பே மூலம் ரூ. 5,000 லஞ்சம்: சிவில் சப்ளை ஆய்வாளர், உதவியாளர் கைது

Published

on

புதுச்சேரியில் புதிய ரேசன் கார்டு பெற ஜி பே மூலம் ரூ. 5,000 லஞ்சம்: சிவில் சப்ளை ஆய்வாளர், உதவியாளர் கைது

புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறையில் புதிய ரேசன் கார்டு பெறுவதில் ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் புதுச்சேரி விஜிலென்ஸ் துறைக்கு சென்றது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஒவ்வொரு முறையும் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது, சிகப்பு அட்டைக்கு பத்தாயிரமும், மஞ்சள் அட்டைக்கு பத்தாயிரமும் வாங்கப்படுவதாக தெரிவித்து வந்தார். இந்த நிலையில், புதுச்சேரியை சேர்ந்த அய்யனார் என்பவர் தனக்கு புதிய ரேசன் அட்டை வழங்கும்படி மனு அளித்திருந்தார். அதற்கு அங்கு பணி புரியும் ஆய்வாளர் சற்குணம் மற்றும் உதவியாளர் பாலகுமாரன் ஆகியோர் ஒன்று கூடி பத்தாயிரம் கொடுத்தால் உடனடியாக உனக்கு ரேசன் கார்டு கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.இதற்கு அய்யனார் ஒத்துக்கொண்டு ரூபாய் 5000 ஜி பே மூலம் அனுப்பி வைத்துள்ளார் . இது தொடர்பாக அய்யனார் புதுச்சேரி விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி புகார் மனு கொடுத்துள்ளார். ஆய்வாளர் வெங்கடாஜலபதி ஒப்புதலோடு அய்யனார் ஜி பே செய்ததாக தெரிகிறது. இதனை ஆதாரமாகக் கொண்டு இன்று புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறையில் ரேஷன் கார்டு வழங்குவதற்கு ரூபாய் 5000 ஜிபே வழியாகவும், ரூபாய் ஐந்தாயிரம் ரொக்கமாகவும் லஞ்சம் பெற்ற ஆய்வாளர் சற்குணம் உதவியாளர் பாலகுமாரன் ஆகியோரை புதுச்சேரி விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் தற்போது கைது செய்தனர்.செய்தி: பாபு ராஜேந்திரன்  – புதுச்சேரி. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version