இலங்கை
பூமியை கடக்கவுள்ள பாரிய விண்கல் ; நாசா விடுத்துள்ள எச்சரிக்கை
பூமியை கடக்கவுள்ள பாரிய விண்கல் ; நாசா விடுத்துள்ள எச்சரிக்கை
மணிக்கு 16,904 மைல் வேகத்தில் பயணித்து பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் விண்கல், இன்று பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லவிருப்பதாக நாசா எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல் 2025 ஓஎல்1 என பெயரிடப்பட்டுள்ளது.
இது கிட்டத்தட்ட ஒரு சிறிய ரக விமானத்தின் அளவில் இருப்பதாகவும், 1.29 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் இது பூமியை பாதுகாப்பாகக் கடந்து சென்றுவிடும் என்று கணிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்வு பூமிக்கு ஒரு எச்சரிக்கையாகவே அமைந்திருப்பதாகவும், ஆனால் பூமிக்கு ஆபத்தில்லை என்றும் நாசா விளக்கம் கொடுத்துள்ளது.
இதுபோன்ற விண்கற்கள், தொடர்ந்து விண்வெளியில், கண்காணிப்புப் பணிகளை அதிகப்படுத்தி, பூமிக்கு ஏதேனும் ஆபத்து நேரிடும் என்றால் அதனை தடுக்கும் உபாயங்களைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே நாசா, இஸ்ரோ போன்ற விண்வெளி ஆய்வு மையங்களுக்கு எச்சரிக்கை தகவலாக அமைந்துள்ளது.