இலங்கை

மர்மமான முறையில் இளைஞன் சாவு!

Published

on

மர்மமான முறையில் இளைஞன் சாவு!

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். 

அருகில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்து விட்டு வீடு திரும்பும் பொழுது இளைஞன் வீட்டுக்கு முன்னால் மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இளைஞர் இவ்வாறான நிலையில் காணப்படுவதை கண்ட உறவினர்கள் அச்சுவேலி பிரதேச மருத்துவனனைக்கு கொண்டுசென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உயிரிழந்தவர் 27 வயதுடைய செல்வச்சந்திரன் மிமோஜன் எனவும் அவரது கால் பாதத்தில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version