இலங்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கன மழைக்கு சாத்தியம்! நாகமுத்து பிரதீபராஜா

Published

on

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கன மழைக்கு சாத்தியம்! நாகமுத்து பிரதீபராஜா

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் வெப்பச் சலனம் காரணமாக எதிர்வரும் முதலாம் திகதி முதல் முதல் எதிர்வரும் 14 ம் திகதிவரை பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகப் புவியியற்றுறைத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். 

 இந்த விடயம் குறித்து அவரது முகப்புத்தகத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடுகையில்,

Advertisement

அதேவேளை எதிர்வரும் 06 ம் திகதி அளவில் இலங்கையின் கிழக்கு, தென் கிழக்கை அண்மித்து வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி தாழமுக்கமாக மாற்றமுற்று மேற்கு, வட மேற்கு திசையில் நகரும் வாய்ப்புள்ளது. 

 இதனால் எதிர்வரும் 06ம் திகதி முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை எதிர்வரும் 17ம் திகதி அன்று வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது.

Advertisement

எனினும் எதிர்வரும் 10ம் திகதிக்கு பின்னரே இதனை உறுதிப்படுத்த முடியும். 

 அதே வேளை வடக்கு மாகாணத்தின் உள் நிலப் பகுதிகளில் குறிப்பாக நெடுங்கேணி, மாங்குளம், மடு, செட்டிக்குளம், துணுக்காய், பாண்டியன் குளம், புளியங்குளம், ஓமந்தை, தாண்டிக்குளம், கீரிசுட்டான், முறிகண்டி, ஆனைவிழுந்தான், ஒட்டுசுட்டான், தம்பலகாமம், கந்தளாய், வாகரை, வெருகல், போன்ற இடங்களில் நாளையும், நாளை மறுதினமும் மிக உயர்வான வெப்பநிலை நிலவும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version