இலங்கை

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து

Published

on

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து

  லிந்துலை – மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பகுதியில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

காயமடைந்தவர்களில் ஒருவரின் முதுகுத் தண்டுவடம் காயமடைந்துள்ளதால், அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுபோதையுடன் அதிக வேகத்தில் வண்டி ஓட்டப்பட்டு, வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாரதி மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் அதிகளவில் மதுபோதையில் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version