உலகம்

சவுதியில் மின்சார ஊஞ்சல் விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயம்

Published

on

சவுதியில் மின்சார ஊஞ்சல் விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயம்

சவுதி அரேபியாவில் உள்ள தாயிஃப் நகருக்கு அருகில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் விபத்து நடந்தது. ராட்டினம் நடுவானில் சரிந்து விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

கிரீன் மவுண்டன் பூங்காவில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் 23 பேர் காயம் அடைந்தனர்.

Advertisement

“360 டிகிரி” என்ற ராட்டினம் சுற்றிக் கொண்டிருந்தபோது, அதன் மையத்தில் இருந்த support pole திடீரென உடைந்தது. 

இதனால் ராட்டினம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. தாயிஃப் நகரில் உள்ள ஹடா பகுதியில் கிரீன் மவுண்டன் பூங்கா உள்ளது. இங்கு ஜூலை 31-ஆம் தேதி ஒரு விபத்து நடந்தது. 

“360 டிகிரி” என்ற ராட்டினம் திடீரென உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் 23 பேர் காயம் அடைந்தனர்.

Advertisement

ராட்டினத்தில் மக்கள் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது ராட்டினத்தின் மையத்தில் இருந்த support pole திடீரென உடைந்தது. 

ராட்டினம் பயங்கர கீழே விழுந்தது. இதனால் ராட்டினத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

உடனடியாக மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Advertisement

தாயிஃப் நகரில் உள்ள மருத்துவமனைகளில் Code Yellow அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

விபத்துக்கான காரணம் என்னவென்று கண்டுபிடிக்க அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version