இலங்கை

அதிகாலையில் இலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு ; இளைஞன் பலி

Published

on

அதிகாலையில் இலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு ; இளைஞன் பலி

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். 

Advertisement

சம்பவத்தில் 23 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்திற்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version