இலங்கை

ஆவரங்காலில் விபத்து; முதியவர் உயிரிழப்பு!

Published

on

ஆவரங்காலில் விபத்து; முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர்,மேலதிக சிகிச்சையின்போது மறுநாள் உயிரிழந்தார்.

முல்லைத்தீவு – உடையார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த இளையதம்பி நந்தகுமார் (வயது-70) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். 

Advertisement

அச்சுவேலியில் உள்ள தனது உறவினரைச் சந்திக்க வந்த இடத்தில், வீதியைக் கடக்க முற்பட்டபோது இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. இதையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையிலேயே மறுநாள் உயிரிழந்துள்ளார். சடலம் மீதான மரண விசாரணைகளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version