இலங்கை

கேலிக்கு உள்ளான அமைச்சர்களின் ஆங்கில புலமை – இலங்கை மக்களுக்கு அவமானம்!

Published

on

கேலிக்கு உள்ளான அமைச்சர்களின் ஆங்கில புலமை – இலங்கை மக்களுக்கு அவமானம்!

வெளிநாட்டு மாநாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்களின் ஆங்கிலப் புலமையை பார்த்து முழு நாடும் சிரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அவர் மேலும் கூறுகையில்,

“பள்ளிகளுக்குச் சென்று ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்ட போது, மக்கள் சிரித்து, என்னை கேலி செய்தனர்.சமீபத்தில் சர்வதேச மாநாடுகளுக்குச் சென்ற அமைச்சர்கள், முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை முன்வைக்கத் தவறியதால், நாட்டிற்காக சரியாகப் பேச முடியாமல் போனது.

இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டுமல்லாது இருநூற்று நாற்பது இலட்சம் இலங்கை மக்களுக்கும் அவமானம் ஆகும். இருப்பினும், இந்த சூழ்நிலையைப் பார்த்து சிரிப்பதற்குப் பதிலாக அனைத்து குழந்தைகளுக்கும் ஆங்கிலப் புலமையை வளர்ப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.  

Advertisement

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆங்கிலக் கல்வியை ஊக்குவித்த போதிலும், ஆங்கிலத்தில் தனக்கிருக்கும் சிறப்பான புலமைக்காக பலராலும் கேலி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version