இலங்கை

சட்டவிரோத செயற்பாட்டில் கைதான எம்.பியின் மகள் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Published

on

சட்டவிரோத செயற்பாட்டில் கைதான எம்.பியின் மகள் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவிக்க மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அவர் நேற்று வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்தார்.

இதன்போது சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர், ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Advertisement

இந்நிலையில், இன்று (31) அவர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version