இலங்கை

டிஜிட்டல் கொடுப்பனவு எண்ணிக்கையை 30 வீதத்தால் அதிகரிக்க திட்டம்!

Published

on

டிஜிட்டல் கொடுப்பனவு எண்ணிக்கையை 30 வீதத்தால் அதிகரிக்க திட்டம்!

நாட்டில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் எண்ணிக்கையை 30 வீதத்தால் அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான  தெளிவுபடுத்தல் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் பிரதான நகரங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு பிரிவின் பணிப்பாளர் K.V.K.அல்விஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

டிஜிட்டல் கொடுப்பனவு பிரிவில் இணையத்தளத்தினூடாக மேற்கொள்ளப்படும் இணையவழி கொடுக்கல் – வாங்கல்கள் மற்றும் வங்கி அட்டைகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் உள்ளடங்குமென என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது, நாளாந்தம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அளவு 1.65 மில்லியனைத் தாண்டியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மத்திய வங்கி திட்டமிடப்பட்ட விளம்பர உந்துதலுடன் இந்த எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 2.15 மில்லியன் பரிவர்த்தனைகளாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version