வணிகம்

டி.சி.எஸ் பணிநீக்கம் எதிரொலி… ரூ. 30,000 கோடி நஷ்டம்; டாடா வீழ்ச்சி ஆரம்பமா? விளக்கும் ஆனந்த் சீனிவாசன்

Published

on

டி.சி.எஸ் பணிநீக்கம் எதிரொலி… ரூ. 30,000 கோடி நஷ்டம்; டாடா வீழ்ச்சி ஆரம்பமா? விளக்கும் ஆனந்த் சீனிவாசன்

சமீப நாட்களில் டி.சி.எஸ் நிறுவனம் தொடர்பான செய்திகள் தான் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. அந்த வகையில், 12 ஆயிரம் ஊழியர்களை இந்நிறுவனம் பணி நீக்கம் செய்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தகவல்தொழில்நுட்ப துறை மட்டுமின்றி வணிகத்தில் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்தது.குறிப்பாக, இத்தனை ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்தது நிறுவனத்திற்கு எந்த மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என்று பலர் கேள்வி எழுப்பினர். மேலும், டாடா நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருப்பவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்துமா என்ற அச்சமும் உருவானது. இது போன்ற கேள்விகள் அனைத்திற்கும் பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன், தனது யூடியூப் சேனலில் விளக்கம் அளித்துள்ளார்.அதன்படி, “டி.சி.எஸ் நிறுவனத்தில் 12 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தகவல்கள் வெளியானது. இவ்வாறு ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ததன் விளைவாக, ரூ. 30 ஆயிரம் கோடி சரிவை, டி.சி.எஸ் நிறுவனம் சந்தித்துள்ளது. இதில், ரூ. 20 ஆயிரம் கோடி நஷ்டம் உறுதி ஆகி உள்ளது.இவாகோ (Iveco) என்ற நிறுவனத்தை, டாடா வாங்க இருக்கிறது என ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தொடர்பான போர்டு மீட்டிங் நடைபெற உள்ளது. இதற்காக 4.5 பில்லியன் டாலருக்கு விலை பேசப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்திய தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் நிறுவனங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவது தெரிய வருகிறது. மேலும், தங்கள் வணிகத்தை சர்வதேச சந்தைக்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த நிறுவனத்தை வாங்குவதற்கு, டாடா நிறுவனம் கடன் வாங்கும் என்று கருதப்படுகிறது.  டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ் ஆகிய நிறுவனங்களில் பங்குதாரர்களுக்கு நஷ்டம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. டாடா குழுமத்தை பொறுத்தவரை, அடுத்த 100 ஆண்டுகளுக்கு கணக்கு பார்த்து பிசினஸ் செய்வார்கள். 1907-ல் தொடங்கப்பட்ட ஸ்டீல் கம்பெனி, இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, பெரிய அளவிலான நஷ்டத்திற்கு வாய்ப்பு இருக்காது” என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version