இலங்கை

தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு தலைவரை நியமிக்கக்கோரி மனு

Published

on

தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு தலைவரை நியமிக்கக்கோரி மனு

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு தலைவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன மற்றும் தெயட சவிய அமைப்பு தாக்கல் செய்த இந்த மனுவில், ஜனாதிபதி, அவரது செயலாளர், சபாநாயகர் மற்றும் அரசமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Advertisement

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவின் பதவி விலகலைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 9ஆம் திகதி முதல் அந்த ஆணைக்குழுவின் தலைவர் பதவி வெற்றிடமாக உள்ளது என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வெற்றிடம் தகவல் அறியும் உரிமைகள் தொடர்பான விசாரணைகளை இடைநிறுத்தியுள்ளது என்றும், 2016ஆம் ஆண்டு 12ஆம் இலக்கத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை அணுகும் பொதுமக்களின் உரிமை மீறப்படுகின்றது என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version