இலங்கை

தமிழக அகதி முகாமில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை வெளியேறுமாறு கோரிக்கை!

Published

on

தமிழக அகதி முகாமில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை வெளியேறுமாறு கோரிக்கை!

தமிழகத்தின் நாமக்கல் மறுவாழ்வு முகாமில் உள்ள 60 க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், தங்களது நாட்டிலிருந்து 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 தமிழகத்தின் பரமத்தி வேலூரில் உள்ள பொலிஸ்பிரிவு, இது தொடர்பில் எழுத்துபூர்வ அறிவிப்புகளை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பில் தெரியவருவதாவது,

தமிழகத்தின் நாமக்கல் மறுவாழ்வு முகாமில் உள்ள 60 க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், பல ஆண்டுகளுக்கு முன்னர் சுற்றுலா விசாக்களில் தமிழகத்துக்குச் சென்றுள்ளனர்.

 அத்துடன் முகாம்களில் ஏற்கனவே தங்கியிருந்த அவர்களின் உறவினர்களுடன் தங்கியுள்ளனர்.

Advertisement

அவர்கள் விசாக்களை புதுப்பிக்கவோ அல்லது இலங்கைக்குத் திரும்பவோ முயற்சிக்காமல் பதிவின்றி சட்டவிரோமாக முகாமில் தங்கியுள்ளனர். 

இதில் சிலர் இலங்கைக்கு மீண்டும் சென்று முகாமுக்கு திரும்பி வந்துள்ளனர்.

இந்த நிலையில், காஷ்மீர் – பஹல்காம் தாக்குதல்களை அடுத்து சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் செயற்பாடுகளுக்கு அமையவே, தற்போதைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

குறித்த இலங்கையர்கள், நீண்ட கால விசாக்களுக்கு விண்ணப்பித்து இங்கு சட்டபூர்வமாகத் தங்க வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்று இந்திய அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

 இதேவேளை, இந்தியாவில், இலங்கை ஏதிலிகள் தொடர்பான விடயங்களைக் கையாளும் வெளிநாட்டுத் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலத்துறை ஆணைக்குழுவிடம், தங்களது சொந்த நாட்டுக்குச் செல்ல விரும்பும் இலங்கையர்கள் குறித்த தகவல்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

 அத்துடன் அவ்வாறு மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை ஏதிலிகளில், இந்தியக் குடியுரிமையைக் கோரியுள்ளவர்கள் தொடர்பான தகவல்களும் அந்த ஆணைக்குழுவிடம் இல்லை என்று இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version