இலங்கை

தமிழ் நாட்டை உலுக்கிய ஆணவ கொலையில் திடீர் திருப்பம் ; காதலி வெளியிட்ட காணொளி !

Published

on

தமிழ் நாட்டை உலுக்கிய ஆணவ கொலையில் திடீர் திருப்பம் ; காதலி வெளியிட்ட காணொளி !

 நெல்லையில் கவின் என்ற ஐடி ஊழியர் கடந்த வாரம் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது.

இந்த விவகாரத்தில் கவினின் காதலி என கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Advertisement

இந்த வழக்கில் சுர்ஜிதின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கவினின் தோழி அதிரடி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறுகையில்,

என் அப்பா அம்மாவை தண்டிக்க வேண்டும் என நினைப்பது தவறு அவர்களை விட்டு விடுங்கள்.

Advertisement

கவினுக்கும் எனக்கும் என்ன உறவு என்று எங்கள் இருவருக்கும் மட்டும்தான் தெரியும்.

உண்மை தெரியாமல் எனக்கும் கவினுக்குமான உறவு பற்றி யாரும் பேசாதீர்கள்.

எல்லோரும் எதை எதையோ பேசுகின்றனர் எனது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். நானும், கவினும் காதலித்து வந்தோம்.

Advertisement

இதுகுறித்து எனது பெற்றோருக்கு தெரியும்.

நானும் கவினும் 6 மாதங்களில் செட்டில் ஆக வேண்டும் என நினைத்து இருந்தோம். ஆனால் அதற்குள் சுர்ஜித், பெண் கேட்டு வருமாறு கவினை அழைத்து சென்றுள்ளார்.

எனது பெற்றோரை விட்டு விடுங்கள்” என கவினின் காதலி வீடியோவில் கூறி உள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version