சினிமா

நடிகரின் கஷ்டத்தில் நண்பனாய் நின்ற பாலா…!வைரலாகும் வீடியோ…!

Published

on

நடிகரின் கஷ்டத்தில் நண்பனாய் நின்ற பாலா…!வைரலாகும் வீடியோ…!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான “கலக்கப்போவது யாரு” மூலம் அறிமுகமானவர் KPY  பாலா. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர், பின்னர் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் சுவாரஸ்யமாக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். சிறு வேடங்களில் திரைப்படங்களிலும் நடித்துள்ள பாலா, சமீப காலங்களில் சமூக சேவைகளிலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.பாலா, தனது சொந்த முயற்சியால் சம்பாதித்த பணத்தை சமூக நலனுக்காக பயன்படுத்தி வருகிறார். ஏற்கனவே பல உதவிகளை செய்துள்ள இவர், தற்போது நடிகர் அபிநய்க்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்..மேலும் “Pls get well soon Abhinay brothe ” அவர் பதிவிட்ட பதிவும் வைரலாகி வருகின்றதுநடிகர் அபிநய் (அபினய்) கிங்கர், தற்போது கல்லீரல் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த செய்தி தெரியவந்ததும், அவரின் நிலையை உணர்ந்த பாலா உடனடியாக நிதி உதவியுடன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். பாலா அபிநய்க்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. பாலாவின் இந்த மனிதநேய செயல் பலராலும் பாராட்டப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version