சினிமா

‘மதராஸி’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்ட படக்குழு…!ரசிகர்களிடம் வரவேற்பு…!

Published

on

‘மதராஸி’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்ட படக்குழு…!ரசிகர்களிடம் வரவேற்பு…!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படமாக நடித்திருக்கும் ‘மதராஸி’ திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்நிலையில், ‘மதராஸி’ படத்தின் முதல் சிங்கிளாக வரும் ‘சலம்பல’ பாடல்  இன்று (ஜூலை 31) வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடலை சிறந்த பாடகரான  சாய் அபயங்கர்  பாடியுள்ளார். அனிருத் இசையில் இவரது குரலும், இசையின் பின்னணியும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில், ‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. தற்போது படம் இறுதிக்கட்ட வேலைகளில் முடிகின்ற நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version