இலங்கை
2026 ஆம் ஆண்டு இலங்கை பொருளாதாரத்தில் வளர்ச்சி
2026 ஆம் ஆண்டு இலங்கை பொருளாதாரத்தில் வளர்ச்சி
2026 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் 3.1 சதவீதத்தினால் வளர்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உலக பொருளாதாரம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உலகளாவிய பணவீக்கம் இந்த ஆண்டு 4.2 சதவீதமாகவும், 2026 ஆம் ஆண்டில் 3.6 சதவீதமாகவும், குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், அமெரிக்க வரிக் கொள்கையை எதிர்கொள்வதால் உலகப் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, பொருளாதார நிலைமை பலவீனமான நிலையில் உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.