சினிமா

அனிருத்திற்கு இப்டி ஒரு ஆசை இருக்கா.? இது தெரியாமல் போச்சே! வைரலான தகவல்கள்…

Published

on

அனிருத்திற்கு இப்டி ஒரு ஆசை இருக்கா.? இது தெரியாமல் போச்சே! வைரலான தகவல்கள்…

தமிழ் சினிமாவின் தற்போதைய இசைத் தலைவராக விளங்கும் அனிருத் ரவிச்சந்தர், தனது சமீபத்திய நேர்காணலில் பல விடயங்களைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் பிரபலமாகிய பின்னரும் தனது பழைய வாழ்கையின் சில அம்சங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் என்றும் கூறியிருந்தார்.அனிருத் ரவிச்சந்தர், 2012-ஆம் ஆண்டு 3 திரைப்படத்தின் “Why This Kolaveri Di” பாடலால் இந்திய அளவில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியிலும் கவனம் பெற்றவர். அதன் பிறகு, “வேலையில்லா பட்டதாரி”, “தங்கமகன்” என வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தார்.அத்தகைய கலைஞர் நேர்காணலில்,”யார் கண்ணுக்கும் நான் தெரியாமல் இருந்தால் முதலில் பஸ்ஸில் பயணிப்பேன். பள்ளி ,கல்லூரி நாட்களில் எப்படி பயணித்தோமோ அப்படியே பயணிக்க விரும்புகிறேன். அதை இப்போது மிஸ் செய்கிறேன். வெளிநாட்டிற்கு சென்றால் என்னால் அதை செய்ய முடியும். ஆனால் எனக்கு இந்தியாவில் அதை செய்ய வேண்டும் என்று தான் விருப்பம்.” எனக் கூறியுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version