உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!

Published

on

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மிரட்டலுக்குப் பிறகு உக்ரைனில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

தலைநகர் கீவ்-வின் பல பகுதிகளில் ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. கீவ் மீது நேற்று இரவு முழுவதும் 309 டிரோன்கள் மற்றும் 8 குரூஸ் ஏவுகணை மழை பொழிந்தது.

Advertisement

இதில் 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 155 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் ஆறு வயது சிறுவனும் அவனது தாயும் அடங்குவர். காயமடைந்தவர்களில் 12 குழந்தைகளும் அடங்குவர் என கியேவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்தார். 

இதற்கிடையே டொனெட்ஸ்கின் முக்கிய கிழக்குப் பகுதியில் உள்ள மலைப்பாங்கான நகரமான சாசிவ்வைக் கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 8 ஆம் திகதிக்குள் போர் நிறுத்தம் செய்யாவிட்டால் ரஷ்யா மீது 100 வரி விதிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version