சினிமா
என் மடிலதான் அவன் உசுரு போச்சு.. உருக வைத்த சரிகமப சீனியர் 5 அறிவழகனின் மறுப்பக்கம்..
என் மடிலதான் அவன் உசுரு போச்சு.. உருக வைத்த சரிகமப சீனியர் 5 அறிவழகனின் மறுப்பக்கம்..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 சில மாதங்களுக்கு முன் துவங்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வார எபிசோட்டில் டெடிகேஷன் ரவுண்ட் நடைபெற்றுள்ளது. தங்கள் வாழ்க்கையில் நடந்த மறக்கமுடியாதவர்களை நினைவுக்கூர்ந்து ஒரு பாட்டினை அவர்களுக்கு டெடிகேட் செய்யவேணும்.அந்தவகையில் போட்டியாளர் அறிவழகன், தன்னுடைய நெருங்கிய நண்பனின் உயிர் தன் மடியில் தான் போனதாக கூறியும் அவனுக்காக இந்த பாடலை டெடிகேட் செய்வதாக கூறி, மீசக்கார நண்பா என்ற பாடலை பாடி அனைவரையும் உருக வைத்துள்ளார்.மேலும் நண்பனின் தந்தை மேடைக்கு வந்து, அறிவழகனை தன் சொந்தமகனாக பார்ப்பதாக கூறியதும் கண்ணீர் வீட்டு கதறி அழுதுள்ளார் அறிவழகன். இந்த வீடியோ இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.