இலங்கை
கிளிநொச்சியில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை!
கிளிநொச்சியில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை!
பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பாடசாலை நாட்களில் கிளிநொச்சி நகரப் பகுதியில் கனரக வாகனக்கள் செல்ல அனுமதிக்கபப்டமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரப் பகுதியில் காலை 6.40 மணி தொடக்கம் 7.30 மணி வரையும், அதேபோன்று பாடசாலை முடிவுறும் நேரம் 1.30 தொடக்கம் 2.00 மணி வரையும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்தை மேற்கொள்வதற்காக கிளிநொச்சி பொலிஸாரின் மனிதநேயச் செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கனரக வாகனங்கள் கிளிநொச்சி நகரப் பகுதிகளுக்குள் பாடசாலை நாட்களில் அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளனர்.