இலங்கை

செம்மணிப் புதைகுழியில் ஞாயிறு, திங்கள் ‘ஸ்கான்’

Published

on

செம்மணிப் புதைகுழியில் ஞாயிறு, திங்கள் ‘ஸ்கான்’

அரியாலை – செம்மணி மனிதப் புதைகுழியில். தரையை ஊடுருவும் ராடர் மூலம், நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் எதிர்வரும் திங்கட்கிழமையும் ஸ்கான் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியில், வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், அதற்கு பாதுகாப்பு அமைச்சு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைப்பதற்குத் தாமதப்படுவதால், ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானரை யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தின் ஊடாகப் பெற்றுப்பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கானர் தற்போது கிடைத்துள்ள நிலையிலேயே, நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் எதிர்வரும் திங்கட்கிழமையும் அங்கு ஸ்கான் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version