இலங்கை
நாட்டின் முன்னணி பல்பொருள் அங்காடி நிலையத்திற்கெதிராக சட்ட நடவடிக்கை
நாட்டின் முன்னணி பல்பொருள் அங்காடி நிலையத்திற்கெதிராக சட்ட நடவடிக்கை
காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னணி பல்பொருள் அங்காடி விற்பனையகத்தின் மூன்று கிளைகளுக்கு எதிராக நீதிமன்றம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட தனித்தனி வழக்குகளில் குறித்த அங்காடியின் கிளைகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் தலா 200,000 ரூபாய் அபராதம் விதித்து புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தின் அறை 5 நீதிபதி உத்தரவிட்டார்.
குறித்த அங்காடியின் கிளைகளில் காலாவதியான ஜெல்லி, மெந்தோல், பிஸ்கட்கள் என்பவற்றை விற்பனைக்கு வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனிடையே பொதுமக்களுக்கு ஏதேனும் முறைப்பாடு அளிக்க வேண்டியிருப்பின் 1997 என்ற நுகர்வோர் அதிகார சபையின் துரித இலக்கத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.