இலங்கை

நைனாகாடு பகுதி சுற்றிவளைப்பில் கஞ்சாவுடன் இருவர் கைது!

Published

on

நைனாகாடு பகுதி சுற்றிவளைப்பில் கஞ்சாவுடன் இருவர் கைது!

 அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மூலம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வருகை தந்த சந்தேகநபர்களை வியாழக்கிழமை (31)  சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை ஊழல் தடுப்பு படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சென்னல்கிராமம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும்,  52 வயதுடைய சந்தேகநபர் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

இவ்வாறு கைதான சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 14 கிராம் 800 மில்லிகிராம் கஞ்சாவும், மற்றைய சந்தேகநபரிடம் இருந்து 57 கிராம் 900 மில்லிகிராம் கஞ்சா மற்றும் ஒரு தொகை பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version